இப் பிரிவில் தங்கள் தொழிலில் சிறப்பான ஓர் இடத்தைத் தமதாக்கிக்கொண்டதுடன், தம் சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கும் 26 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களைக் கொண்டாடுகின்ற விருதுகள் உள்ளடங்குகின்றன.
Apply Nowஇப் பிரிவில் தங்கள் தொழிலில் சிறப்பாகப் பயணிக்கத் தொடங்குவதுடன் தம் சமூகத்திற்காகவும் ஆரம்பகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் 18 - 25 வயதுடைய இளம் தலைமுறைப் பெண்களைக் கொண்டாடுகின்ற விருதுகள் உள்ளடங்குகின்றன.
Apply Nowபரிந்துரைக்கப்படுபவர்கள் தற்போது இலங்கையில் வசிக்க வேண்டும், மற்றும் இலங்கையில் பெண்களின் வளர்ச்சி மற்றும் உரிமைகளில் கவனம் செலுத்தித் தமிழ்ச் சமூகத்திற்குச் சிறந்த சேவையை வழங்கும் பெண் ஆளுமையைக் கொண்டாடுகின்ற விருது.
Apply Nowஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து, தம் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வெற்றியை அடைந்ததுடன் நின்றுவிடாது, தம் சமூகத்தை ஊக்குவிக்கின்ற 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை கொண்டாடுகின்ற விருது.
Apply Nowஇலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், அவற்றை மேம்படுத்துவதற்கும், தம் கூட்டு முயற்சிகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களின் குழுக்களைக் கொண்டாடுகின்ற விருது.அனைத்து பங்கேற்பாளர்களும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
Apply Nowதமது கல்வி, தொழில் உட்பட பல துறைகளில் வல்லவராகத் திகழும் அதே வேளை, எம் சமூகத்தினருக்கு ஏற்படும் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு, தனது எதிர்காலத்தை வடிவமைக்கும் அதே சமயம், எமது சமூதாயத்தின் நேர் மறையான மாற்றத்தை உருவாக்குவதிலும் தைரியம், மற்றும் உறுதியுடன், அயராது அர்ப்பணிப்புடன் பெரும் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறைப் பெண்களை மகுடம் சூட்டிப் பெருமை கொள்கின்றது சிறப்புச் “சுடரி” விருது.